Apr 08

சிரியாவில் அமெ.ஏவுகணை தாக்குதல்; உலக நாடுகள் பலவும் வரவேற்பு

 சிரிய விமானப் படைத்தளத்தின் மீது அமெரிக்காவால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களுக்கு  உலக நாடுகள் பலவும் வரவேற்பளித்துள்ளன.

 மேற்படி ஏவுகணைத் தாக்குதல் குறித்து ஜேர்மனிய அதிபர் அஞ்ஜெலா மெர்கெலும்  பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹொலண்டும் கூட்டாக விடுத்த அறிக்கையில்

சந்தேகத்துக்கிடமான இரசாயனத் தாக்குதலையடுத்து அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு  சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸாத்தின் அரசாங்கமே தனிப் பொறுப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 அதேசமயம் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் டொனால்ட் ட்ரஸ்க் விடுத்த  செய்தியில், காட்டுமிராண்டித்தனமான இரசாயனத் தாக்குதல்களுக்கு தீர்வு காண வேண்டிய தேவைப்பாட்டை அமெரிக்கத் தாக்குதல்கள் காண்பிப்பதாகவுள்ளதாகவும்  சிரியாவில் இடம்பெறும் கொடூரங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கு  அமெரிக்காவுடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றியம் பணியாற்றவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான  பிரித்தானியாவால் வெளியிடப்பட்ட அறிக்கையில்அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு முழுமையான ஆதரவு அளிப்பதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தத் தாக்குதல்கள் மிருகத்தனமான இரசாயத் தாக்குதல்களுக்கு சரியான பதிலடியாகவுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் நேட்டோ விடுத்த செய்தியில், இந்த ஏவுகணைத்  தாக்குதல்களுக்கான முழு பொறுப்பையும் சிரியாவே  சுமக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

 இந்நிலையில் நேட்டோவின் நட்பு நாடான துருக்கியும்   அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்களுக்கு வரவேற்பளித்துள்ளது. துருக்கிய  பிரதி வெளிநாட்டு அமைச்சர் அஸாத்தின் அரசாங்கம் சர்வதேச  அரங்கத்தில் முழுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என தாம் நம்புவதாக கூறினார்.

அதேசமயம்  துரக்கிய வெ ளிநாட்டு அமைச்சர் மெவ்லுட் கவுஸோக்லுசிரிய ஜனாதிபதி பஸார் அல் அஸாத்தை  பதவியிலிருந்து வெளியேற்ற அழைப்பு விடுத்துள்ளார்.

 சவூதி அரேபிய  வெ ளிநாட்டு அமைச்சு  கூறுகையில்சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்கத் தவறிய ஒரு விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் துணிச்சலுடன் செயற்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளதாக பாராட்டுத் தெரிவித்துள்ளது.

  சிரியா மீதான  ஏவுகணைத் தாக்குதல்களுக்கு வரவேற்பளித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ஜமின் நெட்டன்யாஹு,  அமெரிக்கா சிரியாவுக்கு எதிராக மட்டுமல்லாது எதிர்காலத்தில்  ஈரான் மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கும் என தான்  எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 இரசாயன ஆயுதங்களின் பாவனை குறித்து  சகிப்புதன்மை ஒருபோதும் காண்பிக்கப்பட மாட்டாது என்ற அமெரிக்காவின் தீர்மானத்துக்கு ஆதரவளிப்பதாக  ஜப்பான்  தெரிவித்துள்ளது.

 சீனா விடுத்துள்ள செய்தியில்அமெரிக்காவின் இந்த ஏவுகணைத் தாக்குதல்  நிலைமை மேலும் மோசமடைவதை தவிர்ப்பதற்கு அத்தியாவசியமானதாகவுள்ளது  என சுட்டிக்காட்டியுள்ளது.