Apr 08

அமெ. சிரிய மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறும் நடவடிக்கை; ரஷ்யா குற்றச்சாட்டு

சிரிய விமானப் படைத் தளத்தின் மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலானது  இறைமையுள்ள நாடொன்றுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கை எனவும் அது சர்வதேச சட்டத்தை மீறும்  செயல் எனவும்  ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.

அமெரிக்காவானது கடந்த செவ்வாய்க்கிழமை சிரிய கிளர்ச்சியாளரள்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இரசாயன ஆயுதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் முகமமாக மேற்படி ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியிருந்தது. 

அந்த இரசாயத் தாக்குதல் ஈராக்கிய அரசாங்கப் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக நம்பப்படுகிறது.

 அமெரிக்காவின் இந்த ஏவுகணைத் தாக்குதல் நடவடிக்கை   அமெரிக்க ரஷ்ய உறவுகளுக்கு  பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 அத்துடன்  சிரிய வான் பரப்பில்  அமெரிக்க போர் விமானங்களுடனான மோதலைத் தவிர்க்கும் வகையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்ககையொன்றையும் அவர் இரத்துச் செய்துள்ளார்.

 அமெரிக்கா மேற்படி ஏவுகணைத் தாக்குதலை நடத்தவதற்கு சுமார் 30  நிமிடங்களுக்கு முன்னர் அது தொடர்பில் ரஷ்யாவுக்கு அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான பென்டகனால்  அறிவிக்கப்பட்டிருநததாக  ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்தார்.

ஆனால்   அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அரசாங்கம் அந்தத் தாக்குதல் தொடர்பில் ரஷ்யாவின் அனுமதியை எதிர்பார்த்திருக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

 மேற்படி தாக்குதல் தொடர்பான  தகவலையடுத்து ரஷ்ய அதிகாரிகளால் அது குறித்த சிரிய அரசாங்கத்துக்கு எச்சரிக்கப்பட்டதா என்பது குறித்து அறியப்படவில்லை.

 இந்நிலையில் மேற்படி விவகாரம் குறித்து  கலந்துரையாட ஐக்கிய நாடுகள் சபையில் அசாதாரண கூட்டமொன்றைக் கூட்ட  அழைப்பு விடுத்துள்ளதாக ரஷ்ய வெளிநாட்டு அமைச்சு தெரிவிக்கிறது.