Sep 07

ஏழைகளுக்கு உதவ மொடல் அழகி செய்த விசித்திர செயல்!

நியூ யோர்க் ரயில் நிலை­யத்தில் மொடல் ஒருவர், அமெ­ரிக்க டொலர் நாண­யத்­தாள்­களால் அலங்­க­ரிக்­கப்­பட்ட ஆடையை அணிந்­து­கொண்டு நட­மா­டி­ய­துடன் அந்த ஆடை­யி­லி­ருந்து நாண­யத்­தாள்­களை எடுத்­துக்­கொள்­ளு­மாறும் பொது­மக்­க­ளிடம் கோரினார்.

ஆர்­ஜென்­டீ­னாவைச் சேர்ந்த விக்­டோ­ரியா ஸிபோ­லி­டிகிஸ் எனும் மொடலே இவ்­வாறு டொலர்­களால் வடி­வ­மைக்­கப்­பட்ட ஆடை­யுடன் நட­மா­டினார்.

ஏழை­க­ளுக்கு உத­வு­வ­தற்­கா­கவே தான் இவ்­வாறு செய்­த­தாக விக்­டோ­ரியா ஸிபோ­லி­டிகிஸ் தெரி­வித்­துள்ளார். நாண­யத்­தாள்­களால் அலங்­க­ரிக்­கப்­பட்ட ஆடை­யுடன் நான் ரயில் நிலை­யத்­துக்குச் சென்றேன். எதிர்ப்­பட்ட மக்­க­ளிடம், அவர்­க­ளுக்குத் தேவை­யா­னதை எடுத்­துக்­கொள்­ளு­மாறு கூறினேன் என அவர் தெரி­வித்­துள்ளார்.

இவரின் காதலர் நியூ­யோர்க்கில் வசிக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. வாழ்க்கை எனக்கு அதிகம் கொடுத்­துள்­ளது. இது ஏழை­க­ளுக்­காக எனது தரப்பில் ஏதேனும் செய்ய வேண்­டிய தருணம் என நான் எண்­ணினேன் என்­கிறார் விக்­டோ­ரியா.

31 வய­தான விக்­டோ­ரியா ஸிபோ­லிடிக்ஸ், பிளே போய் சஞ்­சி­கைக்கும் போஸ் கொடுத்­தவர்.  எளிய மக்­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக அமைப்­பொன்றை ஸ்தாபிக்க விரும்­பு­வ­தா­கவும் சில மாதங்­க­ளுக்கு முன்னர் இவர் தெரி­வித்­தி­ருந்தார்.

ஆர்­ஜென்­டீ­னாவில் உள்ளூர் பய­ணிகள் விமா­ன­மொன்றின் விமா­னிகள் அறையில் கவர்ச்­சி­யான செல்பீ படங்­களை பிடித்­துக்­கொண்­டதன் மூலம் பிர­ப­ல­மா­னவர் விக்­டோ­ரியா ஸிபோ­லிடிக்ஸ். விமானம் தரை­யி­றங்கும் தருணம் உட்­பட முழு விமானப் பய­ணத்­திலும் தான் விமானி அறையில் இருந்­த­தாக அவர் தெரி­வித்­தி­ருந்தார்.

இவ்­வி­டயம் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்து அதி­கா­ரி­களால் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டன. பின்னர் விக்­டோ­ரியா ஸிபோ­லி­டிக்­ஸுக்கு சுமார் 2 லட்சம் ரூபா அப­ராதம் விதிக்­கப்­பட்­ட­துடன் 18 மாதங்கள் சமூக சேவையில் ஈடு­பட வேண்டும் எனவும் உத்­த­ர­வி­டப்­பட்­டது.  குறித்த விமா­னத்தின் விமா­னிகள் மூவரும் வேலை­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.