Apr 07

பங்களாதேஷ் வெற்றி பெற்றது எப்படி? அர்ஜூன ரணதுங்க விளக்கம்

ஒற்றுமையான நிலையை பேனினால் வங்காளதேச அணியால் இலகுவில் உலக கிண்ணத்தை வெற்றிக்கொள்ளலாம்  என்கின்றார் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணி தலைவர் அர்ஜூன ரணதுங்க.

ஒற்றுமையான மனநிலையினை பேணினால் வங்காளதேச கிரிக்கெட் அணிக்கு எதிர்வரும் உலக கிண்ண போட்டியை வெற்றிக்கொள்ளலாமென முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணிகயின் தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது இலங்கை கிரிக்கெட் பரிபாலனச் சபையைக் காட்டிலும் வங்காளதேச கிரிக்கெட் பரிபாலனச் சபை விளையாட்டின் பொருட்டு காட்டுகின்ற ஆர்வம் உயர் மட்டத்திலுள்ளது. வங்காளதேசம் - இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டியை பதிவுச் செய்யும் பொருட்டு இலங்கைக்கு வருகைத்தந்த வங்காளதேச விளையாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் பொழுதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இவ்வூடகவியலாளர் மகாநாடானது நேற்று (6) பிற்பகல் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைப்பெற்றது.

இலங்கை கிரிக்கெட் இந்நிலையிலேயே தொடருமாயின் இலங்கை அணியால் டெஸ்ட் போட்டிகளின் பொழுது வங்காளதேசத்திடம் தோல்வியுறுமென நான் இற்றைக்கு இரண்டு ஆண்டுகளிற்கு முன்னரே தெரிவித்திருந்தேன். அது நிறைவடைந்த போட்டியில் நிறைவேறியது. தற்சமயம் வங்காளதேச அணியானது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்குகின்றது.  வங்காளதேச அணியின் அர்பணிப்பு உயர்நிலையிலுள்ளது. 89ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளின் பொருட்டு வங்காளதேசத்திற்குச் சென்ற பொழுது அங்குள்ள கிரிக்கெட் பரிபாலன அதிகாரிகளுடன் உரையாடுவதற்கு சந்தர்பம் கிட்டியது. வங்காளதேச கிரிக்கெட் அபிவிருத்தியின் பொருட்டு உதவ எம்மால் முடிந்தது. ' கிரிக்கெட் விளையாட்டில் உங்களுடைய பெயரை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டுமாயின் கிரிக்கெட் விளையாட்டை பாடசாலை மட்டத்திற்கு கொண்டுச் செல்லுங்கள். இளைஞர்களிடையே கிரிக்கெட் விளையாட்டை கொண்டுச் செல்லுங்களென...' நான் வங்காளதே கிரிக்கெட் அதிகாரிகளிடம் தெரிவித்தேன். தற்சமயம் அவ்வதிகாரிகள் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்கள் என்பதை வங்காளதேச அணியின் வெற்றியின் மூலமாக நன்கு புலப்படுகின்றது.

வங்காளதேச பயிற்றுவிப்பாளர்கள் அளப்பரிய சேவையாற்றியுள்ளார்கள். இதனை வெறுமனே தற்போதைய பயிற்றுவிப்பாளரிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தக்கூடாது. வந்தவுடனேயே பயிற்றுவிப்பாளரொருவரால் மாற்றங்களை ஏற்படுத்த இயலாது. இலங்கையிலுள்ள பல பயிற்றுவிப்பாளர்கள் வங்காளதேச அணிக்கு தம்முடைய சேவையை வழங்கியுள்ளார்கள். இங்கே விசேடமாக குறிப்பிட வேண்டிய காரணியொன்றுள்ளது. அதாவது இலங்கை கிரிக்கெட் பரிபாலனச் சபையை காட்டிலும் வங்காளதேச கிரிக்கெட் பரிபாலனச் சபை கிரிக்கெட் பொருட்டு அதிக ஆர்வம் காட்டுகின்றது. அதிக அக்கறை காட்டுகின்றது. அவர்கள் கிரிக்கெட் விளையாட்டை குறிக்கோளாக கொண்டுள்ளார்கள். எங்களுடைய கிரிக்கெட் பரிபாலனச் சபை கிரிக்கெட் விளையாட்டின் பொருட்டு குறிக்கோளின்றி செயற்படுகின்றது.

கிரிக்கெட் விளையாட்டை பற்றி போதிய அறிவில்லை. ஆனால் வங்காளதேச கிரிக்கெட் பரிபாலனச் சபையானது நீண்டகால மற்றும் குறுகிய கால நன்மைகளை எதிர்பார்த்து வெற்றிகரமான முறையில் செய்படுகின்றதென்ப துநன்கு விளங்குகின்றது. அது வெற்றியின் பொருட்டான திட்டாக இருக்க வேண்டும்.

வங்காளதேச அணி முதலாவது போட்டியில் விளையாடிய முறையினை இட்டு மகிழ்ச்சிக்கொள்ள இயலாது. ஆனால் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் பொழுது மிகவும் திறமையான முறையில் விளையாடினார்கள். கிரிக்கெட் என்ற ரீதியில் நோக்குவோமாயின் அவர்களிடையே எவ்வித பிரச்சினைகளும் இல்லை. வங்காளதே வீரர்கள் திறமையானவர்கள். உயரிய தொழில்நுட்பத்துடன் விளையாடுகின்றார்கள். உறுதியான மனநிலையை பேணுவது தொடர்பாக இவ்வீரர்கள் இதனைக்காட்டிலும் அதிகளவு அக்கறைக்கொள்ள வேண்டும். விளையாட்டின் அனைத்து செயற்பாடுகளும் மனநிலையை அடிப்படையாகக் கொண்டே அமைகின்றது. எனவே வீரர்களை உறுதியான மனநிலையினை சரியாக வழிநடத்துவதற்கு விசேட நபரொருவரின் ஒத்துழைப்பினை வங்காளதேச அணி பெற்றுக்கொள்ள வேண்டும்.

அவ்வாறுச் செய்தால் வங்காளதேச அணியால் உலக கிண்ணத்தை இலகுவாக வெற்றிக்கொள்ளலாம். தற்போதுள்ள நிலையிலும் உலக கிண்ண போட்டியில் இறுதி போட்டி வரையில் முன்னேறுவதற்கு சந்தர்பம் கிட்டும்.

நாம் 96ம் ஆண்டு உலக கிண்ண போட்டியில் பங்குப்பற்றும் காலத்தில் நான் 5வது துடுப்பாட்டக்காராகவே விளையாடினேன். அரவிந்த 4வதாக விளையாடினார். அதன் பி;ன்னர் நான் 6ம் நிலையில் விளையாடினேன். மஹேலவை 5ம் நிலையில் விளையாட வைத்தோம். அதாவது எனக்கும் அரவிந்தவுக்கும் இடையில் விளையாட வைத்தோம். இதன் மூலமாக நாம் மஹேல நிதானமான முறையில் விளையாடுவதற்கு சந்தர்பம் ஏற்படுத்திக் கொடுத்தோம். கடந்த சில ஆண்டுகளாக இவ்வாறான முறைகளை பின்பற்றவில்லை. குமார் சங்கக்கார,  மஹேல ஜயவர்தன மற்றும் திலக்கரட்ன டில்சான் ஆகியோர் இரண்டாம் மூன்றாம் மற்றும் நான்காம் நிலைகளிலேயே தொடர்ச்சியாக விளையாடினார்கள். இவ்வீரர்களை நான் குறைக்கூறவில்லை. தேர்வுக்குழுவே தவறிழைத்துள்ளது.  திரிமான்ன மற்றும் சந்திமால் ஆகியோரே இன்று எம்மிடமுள்ள சிறந்த துடுப்பாட்ட வீரர்களாவர். இவ்வீரர்களை பாதுகாக்க எவ்வித நடைமுறையும் இல்லை. குறைந்தபட்சம் கடந்த சில ஆண்டுகளிலேனும் சந்திமால் தேசிய அணியில் நிரந்தர வீரராக விளையாடவில்லை. அன்று சனத் ஜயசூரியவை பாதுகாக்க நாம் பல முயற்சிகளை  எடுத்தோம். இன்று சனத் ஜயசூரிய தேர்வுக்குழுவின் தலைவர் என்ற வகையில் இளம் வீரர்களை பாதுகாப்பதற்கு இவ்வாறான எவ்வித முயற்சிகளை மேற்கொள்வதாக விளங்கவில்லையென ...' இவ்வூடகவியலாளர் மகாநாட்டில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.