Sep 07

உலகத்தில் மிகச்சிறந்த காதலியும், மனைவியும் இவள்தான்!

”ஜென்னி மார்க்ஸ். வசதியான குடும்பத்தில் பிறந்து, கார்ல் மார்க்ஸைத் திருமணம் செய்து, ஏராளமான துயரங்களைச் சந்தித்தவர். வறுமை யின் காரணமாக, அடுத்தடுத்து தன் குழந்தைகளைப் பறிகொடுத்தார்.

கார்ல் மார்க்ஸின் நடவடிக்கை களுக்காக, பெல்ஜியம் அரசாங்கத்தால் ‘விபசார வழக்கில்’ கைது செய்யப்பட்டார் ஜென்னி. மார்க்ஸின் தோழர்கள் சிறையை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். பிறகு, நீதிமன்றத்தில் ஜென்னி நிறுத்தப்பட்டபோது, ‘ஏன் குழந்தைகளையும் கைது செய்யவில்லை?’ என்று போலீஸைக் ‘கண்டித்தார்’ நீதிபதி.

கார்ல் மார்க்ஸ் ஒவ்வொரு நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டபோதும், எண்ணில்லாத நெருக்கடிகளைச் சந்தித்தார். லண்டனில் அழுத தன் பச்சிளம் குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாமல், ஜென்னியின் மார்புகளில் ரத்தம் வழிந்தது.

பால் இன்றி இறந்துபோன குழந்தையை அடக்கம் செய்யவும் வசதி இல்லை. ‘குழந்தை பிறந்தபோது தொட்டில் வாங்கக் காசு இல்லை; அவன் இறந்தபோது, சவப்பெட்டி வாங்க காசு இல்லை’ என்னும் ஜென்னியின் புகழ்பெற்ற கடித வரிகளில் இப்போதும் ரத்தம் கொட்டும்.

உலக வரலாற்றிலும் இலக்கியங்களிலும் லைலா, அமராவதி, ஜூலியட் என்று ஏராளமான காதலிகள் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் காதலையும் காதலனையும் மட்டுமே நேசித்தவர்கள். ஆனால், ஜென்னி மட்டும்தான் தன் காதலனின் லட்சியங்களையும், அதற்காகக் கொடுக்கப்பட்ட விலைகளையும் நேசித்தவர். மார்க்ஸைப் பிரியும்போது வழக்கமாக ஜென்னி சொல்லும் வார்த்தைகள் இவை..

‘நீ என்னருகில் இல்லை என்றஉணர்வில்

நான் என்னிடம் இல்லை என்பதை

உணரக்கூட முடிவது இல்லை!’ ”