Apr 07

சர்வதேசத்தை நம்பியே உறவுகளை ஒப்படைத்தோம்: காணாமலாக்கப்பட்டோரது உறவினர்கள்

சர்வதேச சமூகத்தை நம்பியே பாதுகாப்புத் தரப்பினரிடம் தமது உறவுகளை ஒப்படைத்ததாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குறிப்பிட்டனர். இனியும் காலம் தாழ்த்தாது தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் 46 ஆவது நாளாகவும் வவுனியா மத்திய தபால் நிலைய முன்றலில் 42 ஆவது நாளாகவும் முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்றலில் 29 ஆவது நாளாகவும் மருதங்கேணி பிரதேச செயலக முன்றலில் 23 ஆவது நாளாகவும் கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலக முன்றலில் 33 ஆவது நாளாகவும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்