Sep 05

பிஞ்சு மலரே அனிதா...............

பிஞ்சு மலரே அனிதா...............


அரியலூர் அமுதே எம் அனிதா

அகில மெல்லாம் அழுகிறதே-நீ

விதையாகி விட்டாய்-நாளை

விருட்சமாய் திகழ்வாய்


நீ முத்த மிட்ட  கயிறும்

கதறுதிங்கே உன் பிரிவால்-உன்

நெஞ்சத்தின் கனவுகள்-என்றும்

பஞ்சாகிப் போகாது


உன் இதயச் சுவாலை-நீ

ஊதி மூட்டிய தீ

வெடிக்குதே எம் இதயம்

வெல்வோம் நாம் உன் இலக்கை


பொறுமையா யிருந்தால் நாம் அடிமையா-நாம்

பொங்கி எழுந்தால்

மரினாக் கடலே மிரழும்-தமிழ்

மண்ணில் மாற்றங்கள் நிகழும்


கூன் விழத் தந்தை சுமந்திடும் சுமைகள்

கருவினில் சுமந்த தாயவள் மறைவும்-உன்

மருத்துவக் கனவின் ஆணிவேராகி-அதி

மதிப் எண்கள் பெற்ற மருத்துவர் நீயே


எதிர் கண் அழுதால்

எம் கண்ணும் அழுமே-நாம் தமிழினம்

அடக்க நினைத்தால் அலையாய் வருவோம்-நாம்

ஆழப் போற இனம்

உன் கனவைச் சுமந்த

         கவிஞர்

    நாவாயூரான்

வென்சிலாஸ் அனுரா

         கனடா.