Apr 07

தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, அதிமுக முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் காலை 6 மணி முதல் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வருமானவரித் துறையினர் சோதனையை முன்னிட்டு அமைச்சர் இல்லத்தில் சி.ஆர்.பி.எஃப்., வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில்தான் இருக்கிறார்.

மேலும், புதுக்கோட்டையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்லூரி, கல் குவாரி உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. வரி ஏய்ப்புப் புகார், ஆர்.கே.நகர் பணப் பட்டுவாடா புகார் எதிரொலியாக இந்த சோதனைகள் நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.