Apr 07

காணாமல் ஆக்கப்டோர் உறவினர் போராட்டத்துக்கு ஆதரவாக மோட்டார் சைக்கிள் பேரணி

வவுனியாவில் 42 ஆவது நாளாக நடைபெற்றுவரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று (06) வவுனியா மாவட்ட இளைஞர்களால் மோட்டார் சைக்கிள் பேரணி ஒன்று நடாத்தப்பட்டது.

நூற்றுக்கணக்கானவர்கள் மோட்டார் சைக்கிள்களில் கறுப்புக்கொடிகள் சகிதம் இதில் கலந்துகொண்டிருந்தார்கள்.