Sep 04

1000 கிலோ, 5 மீட்டர் நீளம்; யம்மாடியோவ்.. டயர் கடையில் ஒளிந்து கொண்ட முதலை!

லிம்பாங்கில் உள்ள டயர் கடையில் ஒளிந்து கொண்டிருந்த பெரிய முதலாளியைக் கண்டு அலறிய பொதுமக்கள் தகவல் தர அதை லாவகமாக பிடித்தனர் தீயணைப்புப் படையினர்.

பூட்டிருந்த டயர் கடை வழியாக நடந்து சென்ற சிலர் ஏதோ ஒன்று நெளிந்து கொண்டிருந்ததைக் கண்டு அருகே சென்று பார்க்க பெரிய முதலை ஒன்று மந்தமாக நகர்ந்து கொண்டிருந்தது. 

அதைக் கண்டு அலறிய மக்கள் உடனடியாக தீயணைப்புப் படைக்கு தகவல் கொடுக்க, தீயணைப்பு வீரர்கள் 5 மீட்டர் நீளமுள்ள முதலையைப் பிடித்தனர். கிரேன் மூலம் லாரியில் ஏற்றப்பட்ட அதனை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்க விருப்பதாக வீரர்கள் கூறினர்.