Apr 07

இலங்கை - பங்களாதேஷ் 20-20 தொடரும் சமநிலையிலேயே நிறைவானது

இலங்கை - பங்காளதேஷ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று நடைபெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பங்காளதேஷ  அணித்தலைவர் மோர்தசா துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

இம்ருல் கெய்ஸ், சௌவுமியா சர்கர் ஆகியோர் ஆரம்பம் முதலே முதலே அதிரடியாக விளையாடினார்கள். பங்காளதேஷ அணி 4.5 ஓவரில் 50 ஓட்டங்களைப் பெற்றது.

இம்ருல் கெய்ஸ்(36), சௌவுமியா சர்கர் (34), சஹிப் அல்ஹசன் (38) மொசாடெக் ஹொசைன் (17) ரன்னிலும் வெளியேற, 19 ஓவரில் மலிங்கா ஹட்ரிக் சாதனையை நிலை நாட்டினார்.

பங்களாதேஷ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களைச் சேர்த்தது. 

பின்னர் களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்ப வீரர்கள் பெரேரா மற்றும் முனவீரா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற சாமர கப்புக்கெதர நிதானமாக விளையாடி 50 ஓட்டங்களை இணைப்பாட்டமாக எட்டினார். 

பங்களாதேஷ் வீரர்களின் சிறப்பான பந்து வீச்சால் பின்வரிசை வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அரங்கு திரும்பவும் அந்த அணி 18 ஒவர்களில் 131 ஓட்டங்களுக்கு பெற்ற வேளையில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது தோல்வியை தழுவியது.

இதனால் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளதால் தொடர் சமன நிலையில் நிறைவடைந்துள்ளது. 

அதேநேரம் போட்டியின் ஆட்ட நாயகனாக சஹிப் அல் ஹசனும், தொடராட்ட நாயகனாக லசித் மலிங்கவும் பங்கேற்றிருந்தனர். 

முன்னதாக இலங்கையுடன் இம்முறை பங்காளதேஷ் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர் ஆகியனவும் சமநிலையிலேயே நிறைவடைந்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.