Apr 06

நியூஸிலாந்தில் வெள்ள அனர்த்தம்

நியூஸிலாந்தின்  வட தீவிலுள்ள  எட்ஜெகும்பில் வசிக்கும் அனைவரும்  கடும் வெள்ள அனர்த்தம் காரணமாக  இடம்பெயர்ந்துள்ளனர்.

மேற்படி வெ ள்ள அனர்த்தத்தால்  சுமார் 600  வீடுகளில் வசிக்கும் 2,000  பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

அங்கிருந்து படகுகள் மற்றும் டிரக்டர் வண்டிகள் மூலம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த வெள்ள அனர்த்தத்தை 500  வருடங்களுக்கு ஒரு தடவை இடம்பெறும் மோசமான அனர்த்தம் என அந்நகரின் மேயர்  விபரித்துள்ளார்.

எட்ஜெகும்ப் நகரின் சில பிராந்தியங்களில் 6.5  அடி உயரத்துக்கு வெள்ளம் காணப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.