Sep 02

அமெரிக்கா ஹார்வி புயலுக்கு மத்தியில் கன்னி மரியாள்!

அமெ­ரிக்க டெக்ஸாஸ் மாநி­லத்தைத் தாக்­கிய ஹார்வி சூறா­வ­ளியின் போது  குடும்­ப­மொன்­றுக்கு சொந்­த­மான 3  வீடுகள் மின்­சார ஒழுக்கால் முற்­றாக எரிந்து அழி­வ­டைந்த நிலையில் அங்­கி­ருந்த கன்னி மரி­யாளின் சிலை மட்டும்  அதி­ச­யிக்­கத்­தக்க வகையில் எது­வித பாதிப்­பு­மின்றி  காணப்­ப­டு­வ­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

ஹார்வி சூறா­வளி தாக்­கு­வ­தற்கு முன்னர் ஜீஸஸ் ரொஜஸ் என்­ப­வரும்  அவ­ரது குடும்ப அங்­கத்­த­வர்­களும் ரொப்ஸ்­டவுண் பிராந்­தி­யத்­தி­லுள்ள தமது வீடு­களை விட்டு வெளி­யேறி பாது­காப்­பான இடங்­களில் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்­தனர்.

இந்­நி­லையில்  அந்த வீட்டுத் தொகு­தியில் ஏற்­பட்ட மின்­சார ஒழுக்குக் கார­ண­மாக  பிர­தான 3  மாடிக் கட்­டட வீடு உள்­ள­டங்­க­லாக அந்தக் குடும்­பத்­துக்குச் சொந்­த­மான  3  வீடு­களும்  தீக்­கி­ரை­யா­கினசூறா­வளி ஓய்ந்­த­தை­ய­டுத்து தமது சொந்த இடத்­ திற்கு  திரும்­பிய ஜீஸஸ் ரொஜஸும்  அவரது குடும்­பத்­தி­னரும்  தமது வீடு­களும் வீட்­டி­லிருந்த அனைத்து உடை­மை­களும் தீயில் கருகி அழி­வ­ டைந்­துள்ள நிலையில் அங்கிருந்த கன்னி மரியாள் சிலை மட்டும் எதுவித பாதிப்புமின்றி தப்பியுள்ளதைக் கண்டு வியப்படைந்துள்ளனர்.

.