Sep 02

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் முகுருஜா, வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முகுருஜா, ஷரபோவா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றனர். ஆண்கள் பிரிவில் முன்னணி வீரர் சிலிக் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.‘

கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. 

பெண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்று போட்டியில், விம்பிள்டன் சாம்பியனான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6-1, 6-1 என்ற நேர் செட்டில் மக்டலெனா ரைபரிகோவாவை (ஸ்லோவெகியா) வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதிப் பெற்றார்.

இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில், முன்னாள் சாம்பியன் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 7-5, 6-4 என்ற நேர் செட்டில் மரியா சக்காரி (கிரீஸ்) பந்தாடியதுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றையும் உறுதி செய்தனர்.