Sep 02

சர்வதேச காணாமல் போனோர் தினத்தினை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம்

உலகெங்கும் பல்வேறு இடங்களில் கைதாகி அல்லது கடத்தப்பட்டு காணாமல் போன நபர்களின் தலைவிதி மற்றும் அவர்களின் உறவினர்களின் பரிதாப நிலைமையை உலகுக்குத் தெரியப்படுத்தவும் காணாமல் போனோரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளம் என சர்வதேச காணாமல் போனோர் தினம் பிரகடனப் படுத்தப்பட்டது.

இலங்கையில் மூன்று தசாப்த காலத்துக்கு மேலாகத் தொடர்ந்த யுத்தத்தின் விளைவினால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.

அந்த வகையில் சர்வதேச காணாமல் போனோர் தினத்தினை (30 ஓகஸ்ட்) முன்னிட்டு பிரித்தானிய பிரதமர் வாயிற்தளம் முன்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒரு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  

தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்தினை வலுச்சேர்க்கவும் உலக நாடுகளிடம் நீதிகோரவும் இதனை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது இதன் சாரம்சம் அடங்கிய மனுவும் பிரித்தானிய பிரதமரிடம் கையளிக்கப்பட்டது. 

காணாமல் போனவர்கள் மீதான அக்கறை தொடர்பாக உலகெங்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது