Apr 06

சிரேஷ்ட ஊடகவியலாளர் கதிர்காமத்தம்பி காலமானார்

வட இலங்கை பத்திரிகையாளர் சங்கத் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான செல்லையா கதிர்காமத்தம்பி தனது 89ஆவது வயதில் நேற்றுக் காலமானார்.

ஐம்பது வருடங்களுக்கு மேல் ஊடகத்துறையில் செய்தியாளராக, உதவி ஆசிரியராக பணியாற்றிய இவர் கடந்த சில வருடங்களாக நோய் வாய்ப்பட்டிருந்தார்.

டெய்லிமிரர், தினகரன் பத்திரிகைகளில் யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை செய்தியாளராக பணியாற்றிய இவர் யாழ்ப்பாணத்தில் பல்வேறு சமூக நலச் செய்திகளை வெளிக்கொண்டு வந்திருந்தார்.

ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியின் ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றிய இவர் ஓய்வு பெற்ற பின்னரும் உடுவில் மகளிர் கல்லூரியில் பகுதிநேர ஆங்கில ஆசிரியராக கடமையாற்றியிருந்தார்.

கொக்குவில், தாவடியை வசிப்பிடமாகக் கொண்ட இவரின் இறுதிக்கிரியைகள் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 3மணிக்கு இடம்பெறவுள்ளது.