Apr 06

முல்லை. நாயாறில் சிங்களக் குடியேற்றம்; மாகாணசபை என்ன செய்யப் போகிறது?

முல்லைத்தீவு-நாயாறு பகுதியில் சிங்கள மீனவர்கள் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் செய்வதன் பின்னணியில், நாயாறு பகுதியில் சிங்கள குடியேற்றம் ஒன்றை நிறுவுவதற்கான நோக்க மே உள்ளது. என சுட்டிக்காட்யுள்ளார் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன். நாயாறு பகுதியில் தங்கியிருக்கும் மீனவர்களின் செயற்பாடுகள் அதை உறுதிப்படுத்துவதாகவும்; அவர் தெரிவித்தார். 

நாயாறு பகுதியில் சிங்கள மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்திருக்கும் நிலையில், நேற்று மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் நாயாறு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ரவிகரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில், நாயாறு பகுதிக்கு நேரில் சென்று அங்கு அத்துமீறி தங்கியிருக்கும் சிங்கள மக்களுடன் பேசியிரு க்கிறேன். 

நாயாறு கடலுடன் கலக்கும் பகுதிக்குள் 23 படகுகளை நிறுத்தி வைப்பதற்கு கடந்த 23.02.2017ஆம் திகதி மத்திய கடற்றொழில் அமைச்சின் பணிப்பாளர் அனுமதி வழங்கியிருந்தார். பின்னர் அது தொடர்பாக தமிழ் மீனவர்கள் உரிய தரப்பினருக்கு சுட்டிக்காட்டியிருந்தனர். 

கடந்த மாதம் 23ஆம்; திகதி 23 படகுகளையும் நிறுத்தி வைப்பதற்கான அனுமதியை மத்திய கடற்றொழில் அமைச்சின் பணிப்பாளரே நிராகரித்திருந்தார். என கூறிய ரவிகரன், கடற்றொழில் பணிப்பாளர் நிராகரித்துள்ள போதும் சிங்கள மீனவர்கள் தொடர்ந்தும் அந்தப் பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர்.

இது தொடர்பாக நான் சிங்கள மீனவர்களுடன் பேசினேன். அவர்கள் கூறுகிறார்கள் தாம் வறுமையினாலேயே நாயாறுக்கு வந்து மீன்பிடிப்பதாக. ஆனால் அவர்கள் அனுமதி பத்திரம் பெறாமல், வாடிகளை அமைத்துள்ளதுடன், தமிழ் மக்களுடைய நிலத்தில் கொட்டில்களை அமைத்து கொண்டு குடும்பங்களுடன் வாழ்ந்து வருகிறார்கள்" என மேலும் கூறிய ரவிகரன், அவர்கள் சாதாரணமாக வருவதைபோல் வருவதும் பின்னர் சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில் நிரந்தரமாக அங்கேயே தங்குவதற்குமான ஒழுங்கமைப்புக்களுடன் வந்திருக்கின்றார்கள் என்பதை என்னால் அவதானிக்க முடிந்தது எனவும் கூறினார். 

அதேபோல் நயாறு பகுதியில் மாயபுர என்ற பெயரில் சிங்கள கிராமம் ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளும் மறைமுகமாக நடந்து கொண்டிருக்கின்றது. அந்த கிராமம் உருவாக்கப்படவுள்ளதாக அடையாளப்படுத்தப்படும் இடத்திற்கு அருகிலேயே சிங்கள மீனவர்கள் தங்கியிருக்கின்றனர்.

எனவும் கூறும் ரவிகரன் முழுமையாக சிங்கள குடியேற்றம் ஒன்றை நிறுவும் நோக்கத்துடன் நாயாறு பகுதிக்கு சிங்கள மீனவர்கள் வருகின்றனர். இதனை பொறுப்பு வாய்ந்தவர்கள் தடுத்து நிறுத்தாவிட்டால் அவர்கள் நிரந்தரமாக அங்கேயே தங்கும் அபாயம் உள்ளது என்றும் தெரிவித்தார்.