Apr 06

உக்ரேய்ன் நாட்டுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் ஆயுதவிற்பனைக்கு வழிவகுக்கக்கூடும்

பிரதமர் ரூடோவின் அரசு உக்ரேய்ன் நாட்டுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது.  இதன் மூலம், கனடாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை உக்ரேய்ன் நாடு வாங்கக் கூடிய சாத்தியம் ஏற்படலாம்.

இந்த இருதரப்பு உடன்படிக்கை கனேடியப் பாதுகாப்பமைச்சர் ஹர்ஜித் சஜான் மற்றும் உக்ரெய்ன் நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர்  Stepan Poltorak ஆகியோர்களால் இந்த வாரம் கைச்சாத்திடப்பட்டது.

இந்த உடன்படிக்கை முலம் கனடாவின் நேரடி இராணுவ ஒத்துழைப்பும், பாதுகாப்புத் தொழிற்துறை தொடர்பான உதவிகளும் கிடைக்க வழியேற்பட்டுள்ளதாக  உக்ரேய்ன் நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர்  Stepan Poltorak பேட்டி ஒன்றின் போது தெரிவித்துள்ளார்.