Apr 06

வெளிநாடுகளில் பட்டம் பெற்றோரின் கல்வித் தகைமைகளை துரிதமாக மதிப்பீடு செய்ய அரச நிதி ஒதுக்கீடு

வெளிநாடுகளில் பட்டம் /பயிற்சி  பெற்ற குடிவரவாளர்களின் கல்வித்தகைமைகளை துரிதமாக மதிப்பீடு செய்ய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தொழில்வாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சர் பற்றீசியா ஹஜ்டு தெரிவித்துள்ளார்.

பிரம்டன் நகரில் நடைபெற்ற புதிய குடிவரவாளர்களுக்கான ஒரு நிகழ்வின் பொழுது அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

இச்செயற்பாட்டிற்காக 2017/2018 ஆம் ஆண்டு முதல் எதிர்வரும் 5 வருட காலப்பகுதியில் செலவிடப்பட $ 27.5 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த கனேடியக் குடிவரவு அமைச்சர் அஹமட் ஹூசேன், தனது அமைச்சு தொழில் அமைச்சுடன் இணைந்து இந்நடவடிக்கையை மேற்கொள்ளும் எனத் தெரிவித்தார்.

இதன் மூலம் புதிய குடிவரவாளர்கள் கனடாவை வந்தடைய முன்பே தமது கல்வித் தகைமை, தொழில் மற்றும் திறன்கள் ஆகியவற்றை மதிப்பீடு செய்து, சான்றிதழ் பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்.