Apr 06

அமெரிக்க- மெக்ஸிக்கோ எல்லை சுவரின் முதலாவது மாதிரி வெளியீடு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  குடியேற்றவாசிகள்  தனது நாட்டுக்குள்  வருவதைத் தடுக்க அமெரிக்காவுக்கும்  மெக்ஸிக்கோவுக்குமிடையில்  எல்லைச் சுவரை கட்டியெழுப்பத் திட்டமிட்டுள்ள  நிலையில்  அந்த சுவர் தொடர்பான  முதலாவது  மாதிரி வடிவமைப்புகள்  வெளியாகியுள்ளன.

 மேற்படி சுவர் தொடர்பான வடிவமைப்பை முன்வைத்த நிறுவனமொன்று  அந்த சுவரை நிர்மாணிக்கும் பணியாளர்களை  தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசியத்தை  வலியுறுத்தியுள்ளது.

அதேசமயம் பிறிதொரு  நிறுவனம் ஊழியர்கள் துப்பாக்கிகளை கொண்டு செல்ல முடியுமா என வினவியுள்ளது.

இந்நிலையில் அந்த  எல்லைச் சுவர் தொடர்பான வடிவமைப்புகளை முன்வைத்த 10  கம்பனிகளில்  நான்கு மாதிரி சுவரை வடிவமைக்க  தெரிவுசெய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக  அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் நேற்று  புதன்கிழமை செய்திகளை வெ ளியிட்டுள்ளன.

இதன் பிரகாரம் மாதிரி சுவர்கள் சான்தியகோவில்  கால் மைல் தூர பிராந்தியத்தில் எல்லையிலிருந்து 120  அடிக்குள்  நிர்மாணிக்கப்படவுள்ளன. இந்த ஒவ்வொரு மாதிரி சுவருக்கும் அமெரிக்க அரசாங்கம் தலா 200,000  டொலரிலிருந்து 500,000  டொலர் வரை  செலவிடவுள்ளது.