Apr 06

பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்க முயற்சி; 6 ஈரானிய குடியேற்றவாசிகள் மீட்பு

சிறிய மீன்பிடிப் படகொன்றில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக  பிரவேசிக்க  முயற்சித்த   6  ஈரானிய பிரஜைகளை  பிரான்ஸ் அதிகாரிகள் நேற்று  புதன்கிழமை  பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

  அந்த ஈரானியர்கள் பயணம் செய்த படகு மூழ்க ஆரம்பித்ததையடுத்து அந்தப் படகிலிருந்த குடியேற்றவாசிகள்   நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கடந்த நிலையில்  பிரான்ஸ் அதிகாரிகளுக்கு உதவி கோகரி அழைப்பு விடுத்தனர்.

இதனையடுத்து  பிரித்தானிய கடல் மற்றும் கரையோர பொலிஸாரின்  உதவியுடன் அந்தப் படகைத் தேடும் நடவடிக்கையை  முன்னெடுத்த பிரான்ஸ் அதிகாரிகள், நேற்று புதன்கிழமை அதிகாலை  பிரான்ஸின் காலெயிஸ்  பிராந்தியத்தின்  வட கிழக்கே ஒரு மைல் தொலைவில்   குறிப்பிட்ட படகைக் கண்டுபிடித்து அதிலிருந்த  ஈரானிய குடியேற்றவாசிகளை  மீட்டனர்.

உடல் வெப்பக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அந்த குடியேற்றவாசிகள் அனைவரும் தற்போது  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.