Apr 06

ஈராக்கிய திக்றித் நகரில் தற்கொலைக் குண்டு தாக்குதல்கள்

ஈராக்கிய திக்றித் நகரில் இடம்பெற்ற   தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில்  குறைந்தது 31  பேர் பலியானதுடன் 42  பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

தாக்குதல்தாரிகள் மத்திய திக்றித் பிராந்தியத்தில் துப்பாக்கிச் சூட்டை நடத்திய பின்னர்  அந்தப் பிராந்தியத்திலுள்ள வீடுகளுக்கள் பிரவேசித்து தாம் அணிந்திருந்த தற்கொலை மேலங்கிகளை வெடிக்க வைத்ததாக பிராந்திய பொலிஸார் கூறுகின்றனர்.

மேற்படி தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு குழுவும்  உரிமை கோராத போதும் ஐ.எஸ். தீவிரவாதிகளே காரணம் என நம்பப்படுகிறது.

ஐ.எஸ். தீவிரவாதிகள் 2014  ஆம் ஆண்டில் திக்றித் நகரைக் கைப்பற்றியிருந்தனர். ஆனால் அதற்கு மறு வருடம் அந்த நகர் ஈராக்கிய படையினரால்  மீளக் கைப்பற்றப்பட்டது.