Apr 06

50 அடி ஆழமான குறுகிய கிணற்றுக்குள் விழுந்த பாலகன்

50 அடி ஆழமான கிணற்றில் விழுந்த இரண்டரை வயது ஆண் குழந்தையை மீட்புப் பணியாளர்கள் 10 மணி நேரம் போராடி மீட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

கடந்த திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.

ஸிபோ நகரில் ஸாடியன் பிராந்தியத்தைச் சேர்ந்த ஜியா ஸிஹாவோ என்ற பாலகனே இவ்வாறு 50 அடி ஆழமான 12 அங்குல விட்டமுடைய குறுகிய கிணற்றில் விழுந்துள்ளான்..

இதனையடுத்து பாரந்தூக்கி உபகரணங்கள் நிலத்தை தோண்டும் கருவிகள் சகிதம் சம்பவ இடத்தில் கூடிய மீட்புப் பணியாளர்கள் சுய நினைவுடன் காணப்பட்ட ஜியா ஸிஹாவோவின் உயிரைக் காப்பாற்ற அந்தக் கிணறுக்குள் ஒட்சிசன் உணவு விநியோகத்தை மேற்கொண்டனர்.

கிணற்றின் குறுகிய அளவு காரணமாக மீட்புப் பணியாளர்களால் அந்தக் கிணற்றுக்குள் இறங்கி குழந்தையை மீட்பது சாத்தியமற்று இருந்ததால் அந்தக் கிணற்றுக்கு அருகில் பாரிய அகழியொன்றைத் தோண்டி அந்த அகழிக்கும் குறிப்பிட்ட நீரற்ற கிணற்றில் பாலகன் சிக்கியிருந்த பகுதிக்கும் இணைப்பை ஏற்படுத்தி அந்த இணைப்பினூடாக அவனை மீட்டனர்.

இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பாலகன் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டான்.