Apr 06

அமெரிக்கா முட்டாள் ஒருவரால் ஆட்சிசெய்யப்பட்டு வருகிறது

கலிபா படைவீரர்களின் இரையாக  அமெரிக்கர்கள் மாறியுள்ளனர்  அமெரிக்கர்களுக்கு  ஐ.எஸ். தீவிரவாதிகளின்  முதலாவது நேரடி அச்சுறுத்தல் செய்தி

 அமெரிக்காவானது  மூழ்கிக்கொண்டிருப்பதாகவும் அது முட்டாள் ஒருவரால் ஆட்சிசெய்யப்பட்டு வருவதாகவும் ஐ.எஸ். தீவிரவாதிகள்  தம்மால் அமெரிக்கப் பிரஜைகளுக்கு நேரடியாக விடுக்கப்பட்ட  செய்தியில் தெரிவித்துள்ளனர்.

 அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் அந்தத் தீவிரவாத குழுவால் வெளியிடப்பட்ட முதலாவது செய்தியாக இது உள்ளது.

அமெரிக்கா மூழ்கிக் கொண்டிருக்கிறது.  உங்களில் எவரும் தப்பப் போவதில்லை. நீங்கள் உலகின் ஒவ்வொரு பாகங்களிலுமுள்ள கலிபா படைவீரர்களுக்கு இரையாக மாறியுள்ளீர்கள்.

 நீங்கள் திவாலாகி வருவதுடன் உங்களது  மறைசின் அடையாளங்கள்  அனைவருக்கும் சான்றாக அமையும்"  ஐ.எஸ். தீவிரவாத குழுவின்  பேச்சாளரான அபி அல் ஹஸன் அல் முஹாஜெரால் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதற்கு சிரியா அல்லது ஈராக்  அல்லது இஸ்லாம் தொடர்பில் அறியாத ஒரு முட்டாளால் நீங்கள் ஆட்சிசெய்யப்பட்டுக் கொண்டிக்கிறீர்கள் என்பதை விடவும் வேறு சான்றுகள் தேவையில்லை"  என  அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.