Mar 02

டுபாய் பயிற்சி வெகுவாவாக உதவுகின்றது: டேவிட் வோர்ணர்

இந்தியாவுக்கு வருவதற்கு முன்பாக நாங்கள் துபாயில் ஒரு வார காலம் தங்கியிருந்து பயிற்சி மேற்கொண்டோம் என அவுஸ்திரேலிய அணியின் பிரதி தலைவர் டேவிட் வோர்ணர் தெரிவித்துள்ளார்.

அங்கு இருந்தபடி இந்திய தொடருக்கு எப்படி தயாராகுவது என்பது குறித்து ஆலோசித்தோம்.

இங்குள்ள சூழல் போல் துபாயின் தட்பவெப்ப நிலையும் அமைந்து இருந்ததால், நாங்கள் இந்திய தொடருக்கு சிறப்பாக தயாராவதற்கு உதவிகரமாக இருந்தது.

அப்படியொரு வாய்ப்பு கிடைத்தமைக்காக நன்றி கடன் பட்டுள்ளோம்.
இந்தியா உலகின் முதற்தர’ அணி. அவர்களிடம் மிகச்சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். சரிவில் இருந்து மீண்டு வந்து பதிலடி கொடுக்க முயற்சிப்பார்கள் என்பதை அறிவோம்.