Apr 06

விழிப்புணர்வு பிரசாரத்தில் இறங்கியுள்ள இளவரசர் ஹரி

பிரித்தானிய இளவரசர் ஹரி தனது தயாரான மறைந்த இளவரசி டயானாவைப் பின்பற்றி  அபாயகரமான  நிலக்கண்ணி வெடிகளுக்கு எதிரான பிரசார நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.

அவர் சர்வதேச நிலக்கண்ணி வெடிகள் தொடர்பான விழிப்புணர்வு தினத்தையொட்டி  பிரித்தானிய கென்ஸிங்டன் மாளிகையிலுள்ள  வரவேற்பு கூடத்தில்   இடம்பெற்ற நிகழ்வில் உணர்வுபூர்வமான  முக்கிய உரையொன்றை ஆற்றினார்.

அந்த  2025  ஆம் ஆண்டில் நிலக்கண்ணி வெடிகளற்ற  இடமாக உலகை மாற்றுமவதை இலக்காகக் கொண்டு இடம்பெற்ற அந்த நிகழ்வில் இளவரசர் ஹரி (32  வயது)  தனது  மறைந்த தாயாருக்கு அஞ்சலி செலுத்தினார்.

இளவரசி டயானாவின்  20  ஆவது ஆண்டு நினைவு தினம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. அவர்  1997  ஆம் ஆண்டு கார் விபத்தில் இறப்பதற்கு சில  மாதங்களுக்கு முன்னர் பாதுகாப்பு மேலங்கி மற்றும் மகக் கவசத்தை அணிந்தவாறு  அணிந்தவாறு அங்கோலாவில் நிலக்கண்ணி  வெடிகள் புதைக்கப்பட்ட பிராந்தியத்தினூடாக  நடந்து சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.