Apr 06

ஐ.பி.எல் திருவிழா; ரோயல் சலஞ்சர்ஷ் எதிர் சன் ரைசர்ஸ்

ஐ.பி.எல் திருவிழாவின் ஆரம்ப போட்டியில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களுர் அணியை 35 ஓட்டங்களால்  சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல் தொடரின் 10ஆவது பருவம் இன்று கோலாகலமாக ஆரம்பமாகியது. ஐதராபாத் நகரில் நடைபெற்ற ஆரம்ப விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. 

இதனையடுத்து முதல் போட்டியாக நடப்பு சம்பியன் ஐதராபாத் சன் ரைசர்ஸ் மற்றும் பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் அணிகள் இடையே இரவு 8 மணிக்கு தொடங்கியது. 

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற  பெங்களுர் அணித்தலைலவர் ஷேன் வொட்சன் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

ஐதராபாத் அணியின் அணித்தலைவர் டேவிட் வோர்னர் மற்றும் ஷிகார் தவான் இருவரும் ஆரம்ப வீரர்களாக களம் இறங்கினர். அதிரடியாக விளையாட ஆரம்பி;த்தனர்.

வோர்னர் 8 பந்துகளில் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க பின்னர் ஷிகார் தவானுடன் ஹென்ரிகியூஸ் இணைந்து இருவரும் சீராக ஓட்டங்களை சேர்ந்தனர். ஷிகார் தவான் 40(31) ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த யுவராஜ் சிங் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 62 ஓட்ங்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஹென்ரிகியூஸ் 52(37) ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க  20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 207 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.

கடினமான இலக்குடன் களமிறங்கிய பெங்களுர் அணியின் அதிரடி ஆரம்ப ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 21 பந்துகளில் 32 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

மந்தீப் சிங் மற்றும் ஹெட் ஆகியோர் நல்ல அடித்தளம் அமைத்த போதிலும் அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில்; வெளியேறினர்.

வொட்சன் 22 ஆட்டமிழக்க  பின்வரிசை வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேறியதால் அந்த அணி 19.4 ஓவர்களில் 172 ஓட்டங்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

ஐதராபாத் அணியின் நெஹ்ரா, புவனேஷ்வர் குமார், ராஷித் கான் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆரம்ப போட்டியில்; வெற்றி பெற்றுள்ள ஐதராபாத் அணி இரண்டு புள்ளிகளை பெற்று வெற்றிக் கணக்கை தொடங்கியுள்ளது.