Apr 06

இருபதுக்கு இருபது போட்டிகளுக்கு டாட்டா கூறும் மோர்டஸா

பங்களாதேஷ் அணியின் அணித்தலைவரும் சகலதுறை வீரருமான மஷ்ரஃப் மோர்டஸா இருபதுக்கு இருபது போட்டிகளில் இருந்து விடைபெறுகின்றார்.

இலங்கை அணியுடன் இருபதுக்கு இருபது தொடரில் பங்கேற்று வரும் பங்களாதேஷ் முதலாவது இருபதுக்கு இருபது போட்டி நேற்று நடைபெற்றது.

இதன்போது நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பின்னர் கருத்து வெளியிட்ட அவர், இதுதான் பங்களாதேஷ் அணிக்காக நான் விளையாடும் கடைசி இறுதி இருபதுக்கு இருபது தொடராகும். 

பங்களாதேஷ்  கிரிக்கெட் சபை, எனது குடும்பம், நண்பர்கள், அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அதேபோல் கடந்த 15-16 வருடங்களாக எனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நாளை மறுநாள் நடைபெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியுடன்  சர்வதேச இருபதுபக்கு இருபது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் 33வயதான  மோர்டஸா இதுவரை 52 போட்டிகளில் விளையாடி 368 ஓட்டங்களை சேர்த்ததுடன், 39 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.

இந்த ஓய்வின் பின்னர் அவர் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்தும் களமிறங்கவுள்ளார்.