Mar 02

மும்பை தாக்குதல் பாக்.கை வலியுறுத்தும் இந்தியா

மும்பைத் தாக்குதல் தொடர்பாக இந்திய நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றதைப் போல, பாகிஸ்தான் நீதிமன்றத்திலும் தனியே விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த விசாரணைக்காக இந்தியத் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 24 சாட்சிகளை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த வழக்கை மறுவிசாரணை நடத்த வேண்டும் என்றும், ஜமாத்-உத்-தவா தலைவர் ஹபீஸ் சயீதையும், லஷ்கர்-ஏ-தொய்பா தலைவர் ஜகியூர் ரஹ்மான் லக்வியையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.