Apr 05

தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை 'வீட்டோ' அதிகாரத்தால் தடுக்க முடியாது: அமெரிக்க தூதர் எச்சரிக்கை

தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை வீட்டோ அதிகாரம் மூலம் தடுக்க முடியாது என ஐநாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நிக்கி ஹாலே நேற்று முன்தினம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஏப்ரல் மாதத்துக்கான தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, இந்தியாவின் மீதான தீவிரவாத தாக்குதல் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து அவர் கூறியதாவது:

சர்வதேச தீவிரவாதிகள் சிலருக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஐ.நா. கவுன்சிலுக்கு கோரிக்கை வைத்துள்ளன. ஆனால் ரத்து அதிகாரம் (வீட்டோ) பெற்ற சில நாடுகள் (சீனா) இதற்கு முட்டுக் கட்டை போட்டு வருகின்றன. இது போன்ற தடையால் தீவிரவாதி களுக்கு எதிரான நடவடிக்கையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. சர்வதேச தீவிரவாதிகள் மீது ஐ.நா. பொருளாதார தடை விதிக்க தேவையான நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொள்ளும்.

தீவிரவாதத்துக்கு எதிராக ஐ.நா. உறுப்பு நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா தீவிரமாக போரிட்டு வருகிறது. வரும் காலத்திலும் இணைந்து செயல்படவே விரும்புகிறோம். இதில் பிரச்சினை ஏற்பட்டால் தனியாகவும் தீவிரவாதத்துக்கு எதிராக போரிடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானைத் தலைமையக மாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சர்வதேச தீவிரவாத அமைப்பாக ஐ.நா. ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், அந்த அமைப்பின தலைவர் மசூத் அசாரை ஐ.நா.வின் தடை செய்யப்பட்ட தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன.

ஆனால், இந்த முயற்சியை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக உள்ள சீனா, தனது ரத்து அதிகாரத்தைப் (வீட்டோ) பயன்படுத்தி தடுத்து வருகிறது. இந்நிலையில், நிக்கி ஹாலே இவ்வாறு தெரிவித் துள்ளார்.