Aug 26

நுரையீரல் புற்றுநோயைக் கண்டுபிடிக்க புதிய சுவாசக் கருவி!

நுரையீரல் புற்றுநோயைத் தொடக்க காலத்திலேயே கண்டறிவதற்கென ஒரு கருவியைச் ஜெர்மனி உருவாக்கி இருக்கிறது. 

குடித்து விட்டு வாகனம் ஒட்டுபவர்களிடம் ‘போதை’ அளவைக் கண்டறிவதற்காக பயன்படுத்தப்படும் மூச்சுக் கருவியைப் போன்றதொரு சாதனத்தின் வழி தொடக்க நிலையிலான நுரையீரல் புற்றுநோயைக் கண்டுபிடிக்க முடியும். 

ஜெர்மனியின் நாஹெய்ம் என்ற இடத்திலுள்ள மாக்ஸ் பிளாங்க் ஆய்வுக் கழகம் இந்தக் கருவியைக் கண்டுபிடித்திருக்கிறது. தற்போது இந்தக் கருவி தொடக்கப் பரீசீலனையில் இருக்கிறது. இந்த மூச்சுக் கருவி மூலம் 138 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. நுரையீரல் புற்றுநோயின் தொடக்க நிலையை பாதிப்பை 98 விழுக்காடு வரை மூச்சுக் காற்று கருவியின் மூலம் அது கண்டுபிடித்தது. 

எனினும், தற்போது நடைமுறையில் இருக்கும் நுரையீரல் புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் தொழில் நுட்பங்களுக்கு இந்த மூச்சுக் கருவி ஒரு முழுமையான மாற்றுத் தொழில் நுட்பமாக இப்போதைக்கு அமையாது என்று அந்த ஆய்வுக் கழகம் தெரிவித்தது. 

மேலும், 2,000க்கும் அதிகமான நோயாளிகளிடம் இந்த மூச்சுக் கருவி பரிசோதனை செய்யப்படவிருக்கிறது. புற்றுநோய்களிலேயே நுரையீரல் புற்றுநோய்தான் மிகவும் கொடியது என்று வர்ணிக்கப்பட்டது. இதனை தொடக்க நிலையிலேயே கண்டறிய முடிந்ததால், மரண அபாயத்தைத் தடுக்க முடியும் என்று கூறப்பட்டது.