Apr 05

அகதி உடன்படிக்கையில் மாற்றம் இல்லை –குடிவரவு அமைச்சர்

அமெரிக்காவில் இருந்து கனடாவிற்கு அடைக்கலம் தேடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையிலும், அவர்கள் தொடர்பான வாதப் பிரதி வாதங்கள் தொடரும் நிலையிலும், அமெரிக்காவிற்கும்  கனடாவிற்கும் இடையேயான பாதுகாப்பான மூன்றாம் நாட்டு ஒப்பந்தத்தை இடைநிறுத்துமாறு மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை கனேடியக் குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகம் அகதிகள் தொடர்பான கனடாவின்  நிலைப்பாட்டை ஆதரிப்பதாகவும், அடைக்கலம் கோருவோருக்கான நடைமுறைகள் கனடாவிலும் அமெரிக்காவிலும் திருப்திகரமான முறையில் நடைமுறைப் படுத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்ததாகவும், வான்கூவர் நகரில் நடைபெற்ற குடியுரிமை வழங்கும் நிகழ்வொன்றில் அமைச்சர் தெரிவித்தார்.

அமெரிக்காவிற்கும் – கனடாவிற்கும் இடையேயான பாதுகாப்பான மூன்றாம் நாட்டு ஒப்பந்தத்தில் மாற்றங்கள் எதனையும் ஏற்படுத்த வேண்டிய தேவைகள் இல்லை எனவும் அமைச்சர் கூறினார்.