Apr 05

யாழ். வலயத்தின் முறைசாரா கல்விப்பிரிவின் தொழிற்பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

யாழ்ப்பாணக்கல்வி வலயத்தின் முரைசாராக்கல்விப்பிரிவின் தொழிற்பயிற்சி நிலையத்தை கோப்பாய் மகாவித்தியாலயத்தில் வடமாகாண கலவியமைச்சர் த.குருகுலராசா திறந்து வைத்தார்.

கோப்பாய் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண கல்வியமைச்சருடன், வடமாகாணசபை உறுப்பினர்களானன க.சர்வேஸ்வரன், அ.பரஞ்சோதி, பா.கஜதீபன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மாகாணசபை உறுப்பினர்களுடன் யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் தெவேந்திரராஜா மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் எனப்பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.