Mar 02

சென்னையில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

சென்னை, தாம்பரத்தில் உள்ள, இந்திய விமானப்படை தளத்தில், சிறந்த வீரர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி, நாளை 03-03-2017 அன்று நடைபெறுகிறது.

அந்நிகழ்வில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறார். அதற்காக அவர் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து விமானப்படை விமானத்தில் சென்னைக்கு இரண்ட நாள் பயணமாக வருகை தந்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், காஞ்சிபுரம் ஆட்சியர் வரவேற்றனர்.

இன்று இரவு கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கவுள்ள ஜனாதிபதி பிரணாம் முகர்ஜி நாளை காலை, 9:00 மணியில் இருந்து, 11:20 வரை, விமானப்படை வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 

பின்  மதியம்  12:00க்கு அடையாறில் இந்திய பெண்கள் சங்க நூற்றாண்டு விழாவில் பங்கேற்று விட்டு பிற்பகல் 1:15க்கு டெல்லி புறப்பட்டு செல்வுள்ளார்.