Apr 05

இலங்கை அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாடியது.

20ஓவர்கள் நிறைவில் அவ்வணி  6விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களைப்  பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை குஷால் பெரேரா 53 பந்தகளில் அதிரடியாகப் பெற்ற 77 ஓட்டங்களின் துணையுடன் 18.5 ஓவர்களில் வெற்றி இலங்கை அடைந்தது. இதன் போது நான்கு விக்கெட்டுக்களை மட்டுமே இலங்கை இழந்திருந்தது.

இந்த வெற்றி மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. போட்டியின் நாயகனாக குஷால் பெரேரா தெரிவானார்.