Apr 05

தமிழனுக்கு எல்லா இடத்திலும் கருணாக்கள் இருக்கின்றார்கள்; வைகோ

ஜல்லிக்கட்டுக்காக மாணவர்களும் இளைஞர்களும் ஒன்றிணைந்தார்கள் மகிழ்ச்சி.

ஆனால் ஈழத்தில் பச்சிளம் குழந்தைகள், கொடூரமாக கொல்லப்பட்ட பெண்கள், ஏழு நாடுகளின் ஆயுத உதவியால் கொல்லப்பட்ட நமது உறவுகள் குறித்து குரல் எழுப்பவில்லையே.

இது குறித்து நாம் குரல் எழுப்பினால் இலங்கையில் இருக்கும் சில அரசியல்வாதிகளை கைக்குள் போட்டுக்கொண்டு தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு புத்தி சொல்கின்றார்கள்.

தமிழனுக்கு எல்லா இடத்திலும் கருணாக்கள் இருக்கின்றார்கள் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.