Aug 25

காந்தள் அறிவுக் கூடம் திறப்பு விழா

24.08.2017 அன்று காந்தள் புலம்பெயர் இளையோர் அமைப்பின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஈழத்தில் உள்ள கைதடிப் பிரதேசத்தில் குடும்பங்களின் பொருளாதாரப்பிரச்சனையால் கல்விகற்க இயலாத குடும்பத்தில் வசிக்கும் மாணவ,மாணவிகளை ஊக்கப்படுத்தும் முகமாக அவர்கள் இலவசமாக கல்வியினைக் கற்பதற்கு காந்தள் புலம்பெயர் இளையோர் அமைப்பினால் காந்தள் அறிவுக்கூடம் ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வின்போது அவர்களுக்கான துவுச்சக்கர வண்டியும் காந்தள் புலம்பெயர் இளையோர் அமைப்பின் உறுப்பினர் திரு.நிதர்சன் என்பவரால் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் காந்தள் அறிவுக் கூடம் திறப்பு விழா நிகழ்வில் வட மாகண சபை உறுப்பினர்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள், பிரேதச சபை உறுப்பினர்கள் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.