Aug 25

'தமிழர் தெருவிழா' நாட்களில் மார்க்கம் வீதி மூடப்படவுள்ளது குறித்து Toronto Transit Commission (TTC) அறிவித்தல்.

'தமிழர் தெருவிழா' நாட்களில் மார்க்கம் வீதி மூடப்படவுள்ளது குறித்து Toronto Transit Commission (TTC) அறிவித்தல்.

எதிர்வரும் சனி ஞாயிற்றுக் கிழமைகளில் ஸ்காபரோவின் ஆகப்பெரும் கொண்டாட்டமான 'தமிழர் தெருவிழா' நடைபெறவுள்ளது.  சனிக்கிழமையன்று ரொறண்டோ மேயர் ஜோன் ரோறி அவர்கள் தமிழர் தெருவிழாவினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பார். தெருவிழாவிற்காக மார்க்கம் வீதியின் மக்னிக்கல் அவெனியூவிற்கும் பாஸ்மோர் அவெனியூவிற்கும் இடைப்பட்ட பகுதி மூடப்படவுள்ளது. 

'தமிழர் தெருவிழா' நாட்களில் மார்க்கம் வீதி மூடப்படவுள்ளது குறித்தும், பொதுப்போக்குவரத்திற்கான மாற்று பேருந்துத் தடம் குறித்தும் பொது மக்களுக்கு Toronto Transit Commission (TTC) அறிவித்தல் விடுத்துள்ளது. "மார்க்கம் வீதியின் McNicoll Avenue விற்கும்  Passmore Avenueவிற்கும் இடைப்பட்ட பகுதி ஓகஸ்ட் 26ந்திகதி அதிகாலை 12.01இலிருந்து ஓகஸ்ட் 28 அதிகாலை 4:00 மணி வரை  மூடப்பட்டிருக்கும்" என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருப்பதுடன் 102B 102C 102D இலக்க பஸ் வண்டிகளுக்கான மாற்று வழிகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

வடக்கு நோக்கிச் செல்லும் 102B பேருந்துகள், மார்க்கம் வீதியில் McNicoll Avenueஇல் கிழக்காகச் சென்று  Tapscott Road இல் வடக்காக திரும்பி பின்னர்  Select Avenue வில் மேற்காக திரும்பி மார்க்கம் வீதியை அடைந்து Steeles Avenue வரை செல்லும்.  தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகள் Steeles Avenueவில் கிழக்காகப்் பயணித்து Tapscott Road ஊடாக தெற்கு நோக்கிச் சென்று McNicoll Avenueஇல் மேற்காகத் திரும்பி மார்க்கம் ‌வீதியை  அடைந்து பின்னர் தெற்கு நோக்கிப் பயணிக்கும். 

102C பேருந்துகள் மார்க்கம் வீதியில் வடக்காக சென்று Nashdene Roadஇல் மேற்காக திரும்பி Dynamic Drive வழியாக வடக்காக பயணித்து  McNicoll Avenue வழியாக கிழக்கே சென்று மார்க்கம் வீதியை அடைந்து பின்னர்் தெற்கே பயணிக்கும்.

மேஜர் மக்கென்ஸி - மார்க்கம் வீதிக்குரிய 102D பேருந்துக்கள் மார்க்கம் வீதி - McNicoll Avenue - Tapscott Road - Select Avenue - மார்க்கம் வீதி என்ற வீதி ஒழுங்கில் இருபுறமும் செல்லும்.