Apr 05

வித்தியா கொலை வழக்கில் 10 ஆவது சந்தேக நபருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

புங்குடுதீவல் கூட்டு பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவியின் வழக்கு விசாரணையில் பத்தாவது சந்தேகநபரை எதிர்வரும் மே மாதம் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார்.

குறித்த மாணவியின் கொலை சம்பவம் தொடர்பாக பன்னிரன்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணையானது ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றுவருகின்றது.

இந்நிலையில் இவ் வழக்கின் பத்தாவது சந்தேகநபரான ராஜ்குமார் என்பவரை ஒரு வருடத்திற்கு மேலதிகமாக தொடர்ந்தும் விளக்கமறியில் வைப்பதற்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திகதியிடுவதற்காக இவ் வழக்கானது மேல் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது இவ் வழக்கினை பிரதி சொலிஸ்ர ஜெனறல் குமார்ரட்ணம் நெறிப்படுத்தியிருந்தார்.