Apr 05

யாழ்.பல்கலை கலைப்பீட மாணவ ஆலோசகர்கள் பதவி விலகுவதாக அறிவிப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவ ஆலோசகர்கள் பதவி விலகியுள்ளதாக தெரியவருகின்றது. 

 கடந்த மாதங்களாக யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்டு வரும் முரண்பாட்டு நிலைமை காரணமாக புரிதல் அற்ற நிலையிலேயே மாணவ ஆலோசகர்கள் பதவி விலகியுள்ளதாக தெரியவருகின்றது.

இருந்த போதிலும் மாணவ ஆலோசகர்களுடனான தொடர்புகளுக்கு முயற்சித்த போதும் அவை பயனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.