Mar 02

06 ஆம் திகதி முதல் அரசியலமைப்பு வழிநடத்தும் குழு தொடர்ச்சியாக கூடும்

புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்உப குழுக்களின் அறிக்கைகளில் காணப்படும் பரஸ்பர முரண்பாட்டு தன்மைகளை சீர்ப்படுத்தி அரசியலமைப்பு வழி நடத்தும் குழு 06 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் தொடர்ச்சியாக செயற்பட்டு பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணித்துள்ளார்.

உத்தேச புதிய அரசியலமைப்பு பணிகளை முன்னெடுக்கின்ற அரசியலமைப்பு வழிநடத்தல் குழு திங்கட்கிழமை முதல் தொடர்ச்சியாக ஒன்று கூடி பணிகளை துரிதப்படுத்த உள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் செயற்படும் அரசியலமைப்பு வழிநடத்தும் குழு நேற்று அவசரமாக கூடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது