Aug 24

பிரம்டனில் துப்பாக்கி ரவைகளால் சல்லடை!

பிரம்டன் பகுதியில் உள்ள வீடு ஒன்று நேற்று இரவு துப்பாக்கிச் சன்னங்களால் சல்லடை போடப்பட்ட நிலையில், அது தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கெனடி வீதி மற்றும் ஸ்டீல்ஸ் அவனியு பகுதியில், செம்னி கோர்ட்டில் அமைந்துள்ள வீடு ஒன்றிலேயே, நேற்று இரவு ஏழு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த அந்த வீட்டில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு முறைப்பாடு தெரிவித்ததை அடுத்து, அங்கு விரைந்த அதிகாரிகள், வீட்டிற்கு வெளியே உள்ள நடைபாதைப் பகுதியில் இருந்து பெருமளவு வெற்றுத் தோட்டாக்களை மீட்டுள்ளனர்.

எனினும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட வேளையில், குறித்த அந்த வீட்டில் எவரும் இல்லாமையால், அதிஸ்டவசமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தினை அடுத்து, குறித்த அந்த வீட்டைச் சூழவும் பாரிய பிரதேசத்தினைச் சுற்றி விசாரணை வலையத்தினை அமைத்துள்ள அதிகாரிகள், தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.