Apr 05

கேப்பாபுலவுபகுதியில் 394 ஏக்கர் காணிகளை விடுவிக்க உத்தேசம் அமைச்சர் சுவாமிநாதன்

முல்லைத்தீவு,கேப்பாபுலவுபகுதியில் 394 ஏக்கர் காணிகளைவிடுவிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். 

அத்துடன் விடுவிக்கப்பட்ட மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பாக கவனம் செலுத்துவதாகவும் விரைவில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் சுவாமிநாதன் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நிலையியற் கட்டளை 23இன் கீழ் இரண்டில் ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்  யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இவ்வாறு குறிப்பிட்டார்.