Apr 05

தவறாக வழி நடத்துகிறார் சுமந்திரன் தினேஷ் சாடல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரசியலமைப்பு  உபகுழுவின் செயற்பாடுகளை தவறாக வழிநடத்துகின்றார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டு எதிர்க்கட்சி தலைவருமான தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, வாய்மூல விடைக்கான கேள்வி நேரம், நிலையியற்கட்டளை 23இன் கீழ் இரண்டு ஆகியவற்றைத் தொடர்ந்து ஒழுங்குப்பிரச்சினையை எழுப்பிய தினேஷ் குணவர்த்தன எம்.பி, 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வழிநடத்தல் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் முற்றிலும் தவறானது கருத்துக்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்துகின்றார்.

அரசியலமைப்பு சபையினால் அமைக்கப்பட்ட உபகுழுவின் செயற்பாடுகளை பிழையாக வழிநடத்தும் வகையில் ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியிருக்கின்றார் என சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

சபையிலிருந்த சுமந்திரன் எம்.பி குறித்த ஊடகம் தான் கூறிய கருத்துக்களை சரியான முறையில் அறிக்கையிட்டிருப்பதாகவும், தினேஷ் குணவர்த்தன எம்.பி கூறியதைப் போன்று தான் வழிநடத்தல் குழுவை தவறாக வழிநடத்தியிருந்தால் அது பற்றி வழிநடத்தல் குழுவில் கேள்வியெழுப்ப முடியும். இதற்கான முழுப்பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கின்றேன் என்றார்.