Apr 05

சமீர மீதான துப்பாக்கிச் சூடு: சி.ஐ.டி விசாரணை

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியின் நிறைவேற்று அதிகாரியான டாக்டர் சமீர சேனாரத்னவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் புதிதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தவின் உத்தவுக்கு அமைய குற்றப் புலனவுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, பணிப்பாளர் சுதத் நாகமுல்லா ஆகியோரின் மேற்பார்வையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவின் ஆலோசனைக்கு அமைவாக கூட்டுக் கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் சுனில் சரணபாலவின் கீழ் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.