Apr 05

'மெபரோ' கப்பல் கப்டனின் மரணம் கொலை

2400 கொள்கலன்களுடன் மலேஷியாவில் இருந்து இலங்கைக்கு வந்துகொண்டிருந்த  'மெபரோ ' எனும் கப்பலின் கப்டனான  ஸ்லோவேனியா பிரஜையின் மரணமானது க்குதல் காரணமாக ஏற்பட்டது என பிரேத பரிசோதனை அறிக்கை ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ள   நிலையில், அந்த கப்டன் கொலை செய்யப்பட்டிருப்பதாக தீர்மானிக்கப்பட்டு  சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

துறைமுக பொலிஸார் இது தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தற் சமயம் இந்த கொலை தொடர்பில் கப்பலின் பணியாளர்கள் 24 பேரிடமும் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.