Aug 23

இலங்கையில் நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையிடல் நிகழ்வுகள்!

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் உருவாக்கம் பெற்றவுடன் 2017 [{லை 1 ஆம்நாள் அமெரிக்கா வில் - வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழாவில்கயனா நாட் டின் தலைமை அமைச்சர் மாண்புநிறை மோசஸ் வீராசாமிநாகமுத்து அவர்கள் ஆவணப் படத்தை வெளியிட்டார். முதற் பிரதியை வி.ஐ.டி.பல்கலைக்கழகத்தின் மாண்பு நிறை வேந்தர் கோ.விஸ்வநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டா ர்கள்.

இதனைத் தொடர்ந்து இலங்கையில் விபுலாநந்த அடிகளார்தோற்றுவித்த கல்விக்கோயிலான சிவாநந்த வித்யா லயத்தின் வேலுப்பிள்ளை அரங்கில் ஆவணப்படம் திரையிடப்பட்டது. விபுலாநந்த அடிகளார்ஆவணப் படத்தை அவரது தாய்நாடான இலங்கையில் வெளியிட வேண்டும்என்று அன்பர்கள் பலரும் முன்வந்து வேண்டுகோள் வைத்தனர். விபுலாநந்தஅடிகளார் உருவாக்கிய பள்ளிகளில் பயின்றவர்கள், விபுலாநந்த அடிகளாரின்ஊரைச் சேர்ந்தவர்கள், உறவினர்கள் எனப் பல ரும் அன்புவேண்டுகோள்வைத்ததன் அடிப்படை யில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் இலங்கை யில்திரையிடப்பட்டது. மட்டக்களப்பு நகரில் விபுலாநந்த அடிகளாரின் 125 ஆம் பிறந்தநாள் நிகழ்வு சார்ந்து பல் வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அந்த நிகழ்வின் ஒரு பகுதியாக ஆவணப்படத்தைத் திரைபடம் அறிமுக விழாகுறித்த அழைப்பிதழ் பலருக்கும் அனுப்பப் பட்டிருந்தது. அதனால் மக்கள் கூட்டம்அரங்கு நிறைந்து இருந்தது. பேராசிரியர் சி.மௌனகுரு, கனடாவிலிருந்து வருகைபுரிந்த சிவம் வேலுப்பிள்ளை,மட்டக்களப்பு தமிழ்ச் சங்க த்தின் பொருளாளர் திரு.இரஞ்சித மூர்த்தி, வலயக்கல்விப் பணிப்பாளர் க.பாஸ்கரன், சமூ க ஆர்வலர்காசிபதி நடராசா, மட்டக்களப்பைச் சார்ந்த பல்வேறு இலக்கிய அமைப்பினர்,காரைதீவு சார்ந்த பொதுமக்கள், விபுலாநந்த அடிகளாரின் உறவினர்கள்பெருமளவில் கலந்துகொண்டனர். பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள்,ஆசிரியப் பெரு மக்கள் யிட வேண்டும் என்ற விருப்பத்தை விபுலாநந்த அடிகளார்நூற்றாண்டு விழாச்சபையினர் முன் வைத்தனர். அவர்களின் அன்புவேண்டுகோளை ஏற்று 04.08.2017 பிற்பகல் மூன்று மணியளவில் நிகழ்ச்சியில்கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஆவணப்படம் திரையிடத் தொடங்குவதற்கு முன்பாக ஆவணப்படம் எடுத்தபட்டறி வுகளை ஆவணப் பட இயக்குநர் மு.இளங்கோவன் பகிர்ந்துகொண்டார்.

ஆவணப் படம் திரையிடப்பட்டதும் ஆவணப் படம் குறித்த மதிப்பீட்டு உரையைப்பேராசிரியர் சி. மௌ னகுரு சிறப்பாக வழங்கினார். ஆவணப்படம் குறித்தமதிப்பீடுகளைத் தனித்தனியாக அவரவரும் மு.இளங்கோவனுடன்பகிர்ந்துகொண்டனர். விபு லாநந்த அடிகளார் 125 ஆம் பிறந்த நாள்விழாக்குழுவினர், காரைதீவு விபுலாநந்த அடிகளார் மணி மண்டபத்தின்பொறுப்பாளர்கள், காரைதீவு பொதுமக்கள், மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தார்வழங்கிய சிறப்புகளையும், வரிசைகளையும் மு.இளங்கோவன் ஏற்றுக்கொண்டார்.

இலங்கைத் தலைநகர் கொழும்பு நகரில் அமைந்துள்ள அருள்மிகுபொன்னம்பலவாணே சுவரர் திருக்கோயில் திருமண அரங்கில், 07.08.2017 இல்இந்து சமய கலாசாரா அலுவ ல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றவிபுலாநந்த அடிகளார் ஆவணப்பட அறிமுக விழாவிற்கு யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மிகச்சிறந்த வரலா ற்று அறிஞருமானமுனைவர் சி. பத்மநாதன் ஐயா தலைமை தாங்கினார்.

இலங்கை அரசின் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின்மாண்புநிறை அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அவர்கள் கலந்துகொண்டு,ஆவணப்படத்தை அறிமுகம் செய்து பேசினார்.

விபுலாநந் தரின்சமயப்பணியையும், கல்விப்பணியையும் மாண்புநிறை அமைச்சர் அவர்கள்நினைவுகூர்ந்தார். தம் முன்னோர்கள் விபுலாநந்தருடன் கொண்டி ருந்ததொடர்புகளையும் எடுத்துரைத்தார். மாண்புமிகு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்அவர்கள் விபுலாநந்தரின் பிறந்த ஊரான காரைதீவில் முதன்மைச் சாலையில்விபுலாநந்தர் திருவுருவச் சிலையைத் திறந்துவைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவ ணப்பட இயக்குநர் மு. இளங்கோவனுக்குப் பாராட்டுகளையும்வாழ்த்துகளையும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைத் துணைவேந்தர் நா.சண்முகலிங்கன் அவர்களும், நாடக வியல் அறிஞரும் பேராசிரியருமானசி.மௌனகுரு அவர்களும் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் குறித்த தங்களின்மதிப்பீட்டு உரைகளைச் சிறப்பாக வழங்கினர். விபுலாநந்தர் இலங்கையிலும் இந்தியாவிலும் தம் பன்முகப் பணிகளை விரிவாகச் செய்துள்ளமையை இரண்டுபேராசிரியர்களும் எடுத்து ரைத்து, கலைநேர்த்தியுடன் உருவாகியுள்ள விபுலாநந்தஅடிகளார் ஆவணப்படம் இலங்கையிலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும்நாடுகளிலும் திரையிடப்பட வேண்டும் என்ற தங்களின் விருப்ப த்தைத்தெரிவித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் வி.முத்து, திருப்பூர் மூத்த தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கே.பி.கே. செல்வராஜ்,கனடாவில் வாழும் சிவம் வேலுப்பிள்ளை, திரு தில்லைநாதன், பேராசிரியர்இரகுபரன், ஞானம் இதழின் ஆசிரியர் திரு.ஞானசேகரன்,மூத்த எழுத்தாளர்அந்தோனி ஜீவா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரும், மிகச் சிறந்தசெயல் மறவருமான திரு.அ.உமாமகேசுவரன் அவர்கள் மிகச்சிறந்தஅறிமுகவுரையையும், வரவேற்புரையையும் நிகழ்த்தி னார். இந்து சமயதிணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவ லர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர். இலங்கையின் பல பகுதிகளைச் சேர்ந்ததமிழார்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கல்விப்பணியும், சமயப் பணியும், தமிழாய்வுப் பணியும் செய்து உலகத் தமிழர்களின்உள்ளங்களில் இடம்பெற்ற யாழ்நூலாசிரியர் விபுலாநந்த அடிகளாரின்வாழ்வியலை விளக்கும் இந்த ஆவணப்படம் தமிழகத்திலும்,புதுவையிலும்விரைந்து அறிமுகம் செய்யப் பட உள்ளது.