Aug 21

அடுக்கு மாடியினுள் கத்திக் குத்து: இருவர் படுகாயம்

பார்க்டேல் பகுதியில் நேற்று அதிகாலை வேளையில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஆண்கள் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிங் வீதி மற்றும் டஃவ்றின் வீதிப் பகுதியில் அமைந்துள்ள அடுக்கு மாடிக் கட்டிடம் ஒன்றினுள் நேற்று அதிகாலை 2.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்தில் கத்திக் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட இரண்டு ஆண்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதனை ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கானவர்களின் பெயர் வயது உள்ளிட்ட விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவிலலை.

இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், சந்தேக நபர்கள் குறித்த விபரங்களையும் வெளியிடாத காவல்துறையினர் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.