Aug 21

உலக அளவில் மக்கள் வசிப்பதற்கு மிகச் சிறந்த நகரங்களாக மூன்று கனேடிய நகரங்கள் தெரிவு

உலக அளவில் மக்கள் வசிப்பதற்கு மிகச் சிறந்த நகரங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள முதல் ஐந்து நகரங்களில், ரொறன்ரோ, வன்கூவர், கல்கரி ஆகிய மூன்று நகரங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

பிரபல அனைத்துலக அளவிலான பொருளாதார சஞ்சிகையொன்று மொத்தம் 140 நகரங்கள் மத்தியில் மேற்கொண்ட ஆய்விலேயே இம்மூன்று நகரங்களும் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலின் முதல் இடத்தில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரமும், இரண்டாவது இடத்தில் ஓஸ்ரியாவின் வியன்னா நகரமும் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது நான்காவது ஐந்தாவது இடங்களில் முறையே வன்கூவர், ரொறன்ரோ, கல்கரி ஆகிய நகரங்கள் தேர்வாகியுள்ளன.

அவற்றுள் நிலைத்தன்மையை பேணுதல், சிறந்த சுகாதார நலன்கள், பண்பாடு, சுற்றுச்சூழல், கல்வி, உட்கட்டுமானம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் ரொறன்ரோ நகரம் ஒட்டுமொத்தமாக 97.2 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.