Apr 03

ரஷ்யாவில் குண்டு வெடிப்பு; 10பேர் பலி

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. நகரின் மையமான பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

குண்டுவெடிப்பு காரணமாக ரயில் நிலையங்கள் முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

10 பேர் உயிரிழந்ததாக ரஷ்ய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனையடுத்து 3 ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 

குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு 8 அம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்தன. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு குண்டு 
வெடிப்பு சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுக்காஷேங்கோ, புதின் இடையிலான சந்திப்பு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறவிருந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.